Menu

அரசாங்கத்தை பழிவாங்க எடுக்கும் நடவடிக்கைகளால் மக்களே பாதிப்படைகின்றனர்.!!!

நாட்டில் தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் பணிப்புறக்கணிப்புக்களால் பாதிப்படைவது, அரசாங்கம் அல்ல மக்களே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்புகளை மேற்கொள்ளும் முன்னர் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் என ஜனாதிபதி கோரியுள்ளார்.

தொடரூந்து பணியாளர்கள் நேற்றைய தினம் திடீர் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தனர்.

இதனால் பாதிப்படைந்தது, மக்களும் பாடசாலை மாணவர்களும் சிறுவர்களுமே.

இவை தொடர்பில் மனிதாபிமானத்துடன் சிந்திக்க வேண்டும்.

இவ்வாறான பணிப்புறக்கணிப்பால் அரசாங்கங்கதிற்கு எந்த வித பாதிப்பும் இல்லை.

சில மாணவர்கள் மற்றும் தொழில் புரிவோர் தொடரூந்து பருவச்சீட்டை நம்பியே தமது கடமைகளை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறான நிலையில், அவர்களின் நிலை கேள்விக்குரியாகம் வண்ணம் இவ்வாறான பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஏமன் உள்நாட்டு யுத்ததிற்கான அமைதி பேச்சுவார்தை இறுபறி.!!

ஏமன் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கான...

Leave a Reply

Right Menu Icon