Menu

எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ள வைத்துள்ள சபாநாயகர்.!!!!

அரசியல் யாப்பு மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் அடிப்படையில் தற்போதைய எதிர்கட்சி தலைவரை மாற்றும் அதிகாரம் தம்மிடம் இல்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றில் தெரிவித்தள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவை எதிர்கட்சி தலைவராக நியமிக்குமாறு ஒன்றிணைந்த எதிர்கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கை தொடர்பான தமது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே சபாநாயகர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

ஆளும், மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கள் நிபுணத்துவர்களின் நிலைப்பாடுகள் மற்றும் ஏனைய நாடுகளின் சம்பிரதாயங்கள் ஆழமாக ஆராயப்பட்டு இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக செயற்படுவதாக குறிப்பிட்ட சபாநாயகர் அரசாங்கத்தை அங்கத்துவப்படுத்தாத அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கே எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏமன் தாக்குதலில் 15 பேர் பலி 20 பேர் படுகாயம்.!!

ஏமன் நாட்டில், சவுதி விமானப் படைகள்...

Leave a Reply

Right Menu Icon