Menu

அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் எதிர்கட்சி பதவி..?

பிரதான எதிரக்கட்சி தலைவர் பதவி பொது எதிரணிக்கு வழங்கப்பட வேண்டும் என்றால் முதலில் அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பின்னர் எதிர்கட்சி பதவி குறித்து ஆராய முடியும் என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிப் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைபிற்கே வழங்கப்பட வேண்டும் என சபாநாயகர் இன்று காலை பாராளுமன்றத்தில் அறிவித்ததையடுத்து, பொது எதிரணியினர் சபையில் கூச்சலிட்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன் போது கருத்து தெரிவித்த லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் முடிவை எவரும் விவாதம் நடத்த முடியாது என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் பொது எதிரணியினர் பாராளுமன்றத்தின் விதிமுறைகளை மீறுவதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்க்கட்சி பதவி வேண்டும் என்றால் முதலில் அரசாங்கத்தை விட்டு வெளியேறி சுயாதீனமாக எதிரணியில் அமர வேண்டும் என்று தெரிவித்த லக்ஷ்மன் கிரியெல்ல

அவ்வாறு நீங்கள் சுயாதீனமாக அமருங்கள் அதன் பின்னர் உங்களுக்கு எதிர்க்கட்சி பதவி வழங்குவது குறித்து விவாதிக்கலாம் என்றும் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏமன் உள்நாட்டு யுத்ததிற்கான அமைதி பேச்சுவார்தை இறுபறி.!!

ஏமன் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கான...

Leave a Reply

Right Menu Icon