Menu

சம்பளத்தை 4 கோடியாக உயர்த்திய நயன்

லேடி சுப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தார தற்போது படப்பிடிப்புக்களில் பரபரப்பாக உள்ளார்.

 

தென்னிந்தியத் திரையுலகத்தில், ஒரு நாயகி இவ்வளவு சம்பவளம் வாங்குவாரா என்று, ஏற்கெனவே வியக்க வைத்த நயன்தார தற்போது மீண்டும் அவருடைய சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது.

 

இந்த மாதக் கடைசியில் ‘இமைக்கா நொடிகள்’ படம் வெளியாக உள்ளது.
தற்போது நயன்தாரா தமிழில். ‘விஸ்வாசம், கொலையுதிர் காலம், சிவகார்த்திகேயன் படம் எனச் சில திரைப்படங்களில் நடித்து வருகின்ற நிலையில், தெலுங்கிலும் மலையாளத்திலும் ஒவ்வொரு திரைப்படங்களில் நயன் நடித்து வருகின்றார்.

நயன்தாரவின் உயர்த்தப்பட்ட சம்பளம் 4 கோடி இந்திய ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த தொகையைக் கொடுத்து நயனை நடிக்க வைப்பதற்கும் பல தயாரிப்பாளர்கள், காத்திருக்கின்றனர்.

எனினும் நயன்தாரா நல்ல கதைகளை மட்டுமே தெரிவு செய்து நடித்து வருகின்றார்.

 

தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உள்ளிட்ட பெரிய நடிகர்கள் கூட, நயன்தாராவுக்காகக் காத்திருந்து அவர்களது படங்களின் படப்பிடிப்பை ஆரம்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon