Menu

நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு ஒரு வருடத்தில், 77 வருமானம்

உலகளவில் பிரபல நாயகியாக வலம் வரும், நடிகை பிரியங்கா சோப்ரா 2002 ல், தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்திருந்தார்.

 

அதன்பின்னர், ஹிந்தி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியா உயர்வடைந்துள்ளார்.

 

பிரியங்கா, மூன்று வருடங்களுக்கு முன்னால் குவாண்டிகோ டி.வி தொடர்மூலம் ஹொலிவுட்டுக்கு பிரவேசித்த நிலையில் இந்த தொடர், சர்வதேச அளவில் பிரயங்காவிற்கு பெயர் பெற்றுக் கொடுத்தது.

 

அதன்பின்னர், இந்தி படங்களில் வாய்ப்புக்களைப் பெற்ற பிரியங்கா 2017 ல், ´பேவாட்ச்´ ஹொலிவுட் படத்தில் நடித்தார்.

 

இந்த படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் எழுப்பப்பட்டு படம் நன்றாக ஓடாத போதிலும் பிரியங்காவின் நடிப்பிற்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

 

தற்போது ´த ஸ்கை ஸ் பிங்´ என்ற ஹிந்தி படத்தில் நடிக்கும் பிரியங்கா சோப்ரா, ஹொலிவுட் படமொன்றிலும் ஒப்பதமாகி உள்ளார்.

 

அமெரிக்க பொப் பாடகர் நிக் ஜோனாசுடன் காதல் வயப்பட்டு , இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளது.

 

இந்த நிலையில் கடந்த வருடம் பிரியங்கா சோப்ரா சம்பாதித்த மொத்த வருமானம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

 

திரைப்படங்கள், விளம்பர படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தமை, ஆடை நிறுவனங்கள், அழகு சாதன பொருட்களுக்கு விளம்பர தூதுவராக இருந்தது ஆகியவற்றின் மூலம் பிரியங்கா சோப்ரா 77 கோடி சம்பாதித்துள்ளார்.

 

இதில் வரி கழிவுகள் போக 56 கோடி பிரியங்கா சோப்ராவிற்கு வருமானமாக கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon