Menu

இடைத்தேர்தல் தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜஸ்ரின் ட்ரூடோ..!!!

கனடாவில் இடைத் தேர்தலை நடாத்துவதற்கான எந்த திட்டமும் இல்லை என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்திய போதே கனேடிய பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கனடாவில் இடைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை என தெரிவித்த ஜஸ்ரின் ட்ரூடோ இனிவரும் காலங்களிலும் இவ்வாறான எந்த திட்டங்களும் முன்னெடுக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமது அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட வேண்டிய பல விடயங்கள் காணப்படுவதாகவும் ஜஸ்ரின் ட்ரூடோ மேலும்தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரை பலப்படுத்தல், நல்லிணக்கத்திற்கான பணிகளை தொடர்தல், அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் வலுவான பொருளாதார கட்டமைப்பை உருவாக்கல் போன்ற பல பணிகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளதாகவும் கனேடிய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த கால கொன்சவேற்றிவ் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட நிலையான தேர்தல் நியதி சட்டத்திற்கு அமைய கனடாவில் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதியே தேர்தல் நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon