Menu

இந்தியாவின் மிகச்சிறந்த அரசியல் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் சம்பந்தன் இரங்கல்..!!!

தனது நேர்மையான தாழ்மையுடன் கூடிய தலைமைத்துவத்தினால் இந்தியாவை வழிநடாத்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இலங்கை வாழ் தமிழ் மக்களின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியீட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஒரு மிகச்சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், ஒரு சிறந்த அறிவாளியுமான அடல் பிகாரி வாஜ்பாய்யை இந்தியா இழந்துள்ளது. வாஜ்பாய், ஒரு மிகச்சிறந்த தலைவர் மட்டுமல்லாது, அவரது தொலைநோக்கு தலைமைத்துவத்தின் கீழ் இந்தியா அநேக சாதனைகளை நிலைநாட்டுவதற்கும் வழிவகுத்தார்.

தனது நேர்மையான தாழ்மையுடன் கூடிய தலைமைத்துவத்தினால் இந்தியாவை வழிநடாத்திய வாஜ்பாய், உலகம் முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான மக்களினால் நேசிக்கப்பட்ட மதிக்கப்பட்ட ஒரு தலைவராவார்.

மிகச்சிறந்த பேச்சாளர் மட்டுமல்லாது, நல்ல நகைச்சுவை உணர்வு மிகுந்த ஒருவருமாவார். பாரதிய ஜனதா கட்சிக்கும், இந்திய அரசுக்கும், இந்திய மக்களிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் என்றும் இரா. சம்பந்தன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon