Menu

கேரளா மிகப்பெரும் இயற்கை பேரழிவை சந்தித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை.!!!

இந்திய மாநிலமான கேரளாவில் நூறாண்டு காணாத வெள்ளப் பெருக்கால் அதிகமான உயிர்பலிகள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளதாகவும் அன்ட்டோனியோ குட்டெரஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று மட்டும் 22 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரையில் 346 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட உயிர் சேதங்களுக்கு ஐ.நா.சபை பொதுச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த பெரு வெள்ளத்தினால் ஏற்பட்ட பேரிழப்பு, உயிர்பலி மற்றும் மக்களின் இடப்பெயர்வு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வேதனை கொண்டுள்ளதாக அன்ட்டோனியோ குட்டெரஸ் மேலும் தெரிவித்தள்ளார்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை இந்தியா கோரியுள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அன்ட்டோனியோ குட்டெரஸ்-ன் செய்தி தொடபாளர் ஸ்டெஃபானே டுஜாரிக்,

இயற்கை பேரிடர்களை கையாள இந்தியாவிடம் போதுமான வசதிகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனால், தங்களிடம் எந்த உதவியும் கோரப்படவில்லை என தெரிவித்த டுஜாரிக்,  ஆனால், இந்தியாவில் உள்ள ஜ.நா குழுவினர் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon