Menu

அதிமுக அரசுக்கு தொலை நோக்குப் பார்வை இல்லை ஸ்டாலின் குற்றச்சாட்டு!!!

தமிழ்நாட்டில் அணைகளில் இருந்து திறக்கப்படுகின்ற காவிரி நீரானது வீணாக கடலில் கலப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

அணைகளில் இருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதற்கு நீர் மேலாண்மை குறித்து அதிமுக அரசுக்கு தொலை நோக்குப் பார்வை இல்லாமையே காரணம் என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயெ மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

ஆயிரக்கணக்கான கோடி ரூபாக்களை செலவழித்து ஏரிகள், குளங்கள், மற்றும் அணைகள் போன்றவற்றை மறுசீரமைப்பு செய்வதில் அதிமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டதாக மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனியாவது தொலை நோக்கு பார்வையுடன் நீர் மேலாண்மை திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நதி நீர் இணைப்பு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கடலில் கலக்கும் காவிரி நீரை தடுத்து வேளாண்மைக்கும், குடிநீர் தேவைகளுக்கும் திருப்பி விடுமாறு அதிமுக அரசிடம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாளையதினம் மகிந்த பாராளுமன்றில் விசேட உரை

நாளையதினம் பாராளுமன்றில் பிரதமர் மகிந்த...

Leave a Reply

Right Menu Icon