Menu

அட்டல் பிகாரி வாஜ்பாயின் அஸ்தியானது கங்கை நதியில் கரைக்கப்பட்டது.!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாயின் அஸ்தியானது நேற்று ஹரித்துவார் நகரில் கங்கை நதியில் கரைக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு யாத்திரையாக கொண்டு செல்லப்பட்டது.

பன்னா லால் பல்லா நகராட்சி கல்லூரியில் இருந்து புறப்பட்ட இந்த யாத்திரையானது பிரேம் ஆசிரமத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர் புனித நதியான கங்கையின் பிறப்பிடமான ஹர் கி பவுரி காட் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

புரோகிதர்கள் மந்திரங்கள் ஓத, ஈமச்சடங்குகளுக்கு பின்னர் வாஜ்பாயின் வளர்ப்பு மகளும், அவரது சிதைக்கு தீ மூட்டியவருமான நமிதா கலசத்தில் இருந்த வாஜ்பாயின் அஸ்தியை கங்கை நீரில் கரைத்தனர்.

இந்த சடங்கில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா,
உத்தரப்பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத், உத்தராகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், வாஜ்பாயின் பேத்தி நிஹாரிக்கா மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நாடாளுமன்ற உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கஜா நிவாரண பொருட்களில் ரஜினி புகைப்பட ஸ்டிக்கர் !!

கஜா புயலின் கோர தாண்டவத்தில் நாகை, கடலூர்...

Leave a Reply

Right Menu Icon