Menu

விக்கியின் கருத்தை வரவேற்றுள்ள மனோ..!!!!

நாட்டில் தமிழர் தாயகப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள யுத்த வெற்றியின் நினைவுச் சின்னங்கள் அகற்றப்பட வேண்டும் என, அமைச்சர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்தள்ளார்.

வடக்கில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ வெற்றிச் சின்னங்கள் அங்கிருந்து அகற்றப்படவேண்டும் என, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் ஏற்கனவே கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்விடையம் தொடர்பாக தெற்கில் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் இது தொடர்பாக மனோ கணேசனிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருந்தன.

இதற்கு பதில் வழங்கும் போதே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரனின் கருத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ள மனோ கணேசன் அவரது கருத்தில் தவறில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜே.வி.பி கிளர்ச்சியை வெற்றி கொண்ட அரசாங்கம் தெற்கில் வெற்றிச் சின்னங்களை அமைக்காத நிலையில், வடக்கு மற்றும் கிழக்கில் மட்டும் வெற்றிச் சின்னங்களை அமைப்பது நியாயமா? என்றும் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon