Menu

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவி கடத்தி பாலியல் வன்புணர்வு..!!!!

முல்லைத்தீவில் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியொருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவின் பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரப் பரீட்சை எழுதிவரும் 19 வயதுடைய மாணவியே இவ்வாறு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பளை பகுதியை சேர்ந்த 22 வதுடைய இளைஞர் குழுவொன்று  குறித்த மாணவியை வாகனமொன்றி கடத்தியுள்ள அதேவேளை பளைப்பகுதியில் வைத்து பாலியல் வன்புணர்வினை மேற்கொண்டு விட்டு இன்றையதினம் உடையார் கட்டுப்பகுதியில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.

கலைப்பிரிவில் உயர்தர பரீட்சையில் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த 19 வயதுடைய மாணவி பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலே இவ்வாறு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க்படுகின்றது.

இந்நிலையில் மாணவி வீடு திரும்பாத நிலையில்  மாணவியின் தாயார் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் மாணவியைக் காணவில்லை என்று முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன் கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டவர்கள்  குறித்த மாணவியை முல்லைத்தீவின் உடையார் கட்டு பகுதியில் விட்டு சென்றுள்ளதுடன் மாணவி தாயாரிடம் சம்பவத்தினை விபரித்துள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த மாணவியுடன் தாயார் பொபொலிஸ் நிலையம் சென்று நடந்த சம்பவத்தினை தெரியப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்துள்ள விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை  நீதி மன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon