Menu

மஹிந்த தற்போதும் ஜனாதிபதியாகவே வாழ்கின்றார். தலதா அதுகோரல!!!!

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாவதற்கான சாத்தியம் இல்லை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணை செய்து முடிப்பதற்காக அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட விசேட நீதிமன்றம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த நீதிமன்றத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே தலதா அதுகோரல இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு மீண்டும் போட்டியிட முடியாது என்றும் தலதா அதுகோரல மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப்பெற்று 3 மாதங்களுக்குள் 18 ஆவது திருத்தச்சட்டத்தை மகிந்த கொண்டுவந்ததாக தெரிவித்த தலதா அதுகோரல

இந்தத் திருத்தச்சட்டம் தற்போது மாற்றப்பட்டு 19 ஆவது திருத்தச்சட்டமே நடைமுறையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், முன்னாள் ஜனாதிபதி தானே இன்னும் ஜனாதிபதியாக இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை என்றும் தலதா அதுகோரல மேலும் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியின் தெரிவுக் குழுவுக்கு எழுவர் நியமனம்

ஆளும் கட்சியின் தெரிவுக் குழுவுக்கு ஏழு...

Leave a Reply

Right Menu Icon