Menu

தமிழ் இனத்தை அழிக்க பல கோணங்களில் அரசு முயற்சி.!!!

நாட்டில் தமிழ் இனம் மீண்டும் எழுச்சி பெறக்கூடாது என்பதற்காக அரசாங்கம் பல்வேறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் இனத்தின் இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனித்ததன் பின்னர் இலங்கை அரசானது தமிழ் இனம் மீண்டு எழுச்சி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு வேலைகளை பல கோணங்களில் முன்னெடுத்து வருவதாகவும்; சாந்தி சிறிஸ்கந்தராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.

வவுனியா, வெடுக்கு நாறி ஆதி சிவன் ஆலயத்தை தொல் பொருட் திணைகளம் கையகப்படுத்த முயல்வது தொடர்பில் எழுப்பபட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே சாந்தி சிறிஸ்கந்தராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் வடக்கு மாகாணத்தில்; இன்று தோன்றியுள்ள கஞ்சா கடத்தல், மதுபோதை, குத்துச் சண்டைகள், வாள்வெட்டுக்கள் போன்ற குழுக்களை உருவாக்கி விட்ப்பட்டிருப்பதாகவும் சாந்தி சிறிஸ்கந்தராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தமிழ் இனத்தின் இருப்பை இல்லாதொழித்து இருப்புக்களை மாற்றியமைக்கும் வகையில் தொல் பொருள் திணைக்களத்தின் கீழ் தமிழ் மக்களது பூர்வீக காணிகள் அடாத்தாக பதிவு செய்யப்பட்டிருபதாகவும் சாந்தி சிறிஸ்கந்தராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசினுடைய இவ்வாறான நடவடிக்கைகள் மிகவும் கண்டனத்திற்குரியது என்றும் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

எனவே இந்த நிலைப்பாடுகளை அரசாங்கம் மாற்றியமைத்து தமிழர் அவர்களது நிலங்களில் இயல்பாகவே இன சுதந்திரம், மற்றும் மத சுதந்திரத்தோடு வாழக் கூடிய ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்றும் சாந்தி சிறிஸ்கந்தராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாளையதினம் மகிந்த பாராளுமன்றில் விசேட உரை

நாளையதினம் பாராளுமன்றில் பிரதமர் மகிந்த...

Leave a Reply

Right Menu Icon