Menu

தலிபானுடனான அமைதிப் பேச்சுக்கு ஆப்கானிஸ்தான் மறுப்பு

தலிபானுடனான அமைதிப்பேச்சுக்கு ரஷ்யா விடுத்த அழைப்பை ஆப்கானிஸ்தான் மறுத்துள்ளது.

 

ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை தொடர்பில், ரஷ’யா அழைப்பு விடுத்திருந்தது.

 

இந்த அழைப்பை தலிபான்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், ஆப்கானிஸ்தான் அரசு அழைப்பை நிராகரித்துள்ளது.

 

ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையில், சுமார் 17 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.

 

நாட்டின் பல பகுதிகளை பிடித்து வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினருடன் சண்டையிட்டு வருகின்றனர்.

 

எனினும், சமீபத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இடைக்கால போர்நிறுத்தத்துக்கு ஜனாதிபதி அஷ்ரப் கானி அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதனை தலிபான்கள் நிராகரித்திருந்தனர்.

 

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் அமைப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தேவையான உதவிகளை ரஷியா செய்யும் என அறிவிப்பு வெளியானது.

 

இதற்காக அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் தலிபான் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை கூட்டத்தை மாஸ்கோவில் நடத்தவுள்ளதாக ரஷியா அறிவித்தது.

 

ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க விருப்பம் இல்லை என ஆப்கானிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுக்கு இடையிலான பிரச்சனைகளை இரண்டு தரப்பும் நேரடியாக பேசி தீர்த்துக்கொள்ளும் என்றும் அதில், மூன்றாவது நாட்டின் தலையீடு தேவையில்லை என ஆப்கானிஸ்தான் ரஷ்யாவிற்கு தெரிவித்துள்ளது.

நாளையதினம் மகிந்த பாராளுமன்றில் விசேட உரை

நாளையதினம் பாராளுமன்றில் பிரதமர் மகிந்த...

Leave a Reply

Right Menu Icon