Menu

கனடாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

ஊக்ஸ் ப்றிச் பகுதியில், இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில், 46 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

இந்த விபத்து இன்று அதிகாலை 12.15 மணியளவில் ரொரண்டோ ஸ்ரீட் தெற்கு கெம்பல் ட்றைவ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 

விபத்தில் காயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் விபத்தினால் மூடப்பட்ட வீதிகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon