Menu

மிசிசாகா பகுதியில் துப்பாக்கி சூடு இரண்டு பேரை தேடும் பொலிசார்..!!!

மிசிசாகா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு பேரை தேடி வருவதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிசிசாகா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை 2 பேரை தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பீல் பிராந்திய பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இன் வெர் கார்டன் வீதிக்கு அருகில் நேற்றையதினம் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் 26 வயதுடைய இளைஞன் காயமடைந்திருந்த நிலையில், சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 2 பேர் தப்பி சென்றுள்ளதாகவும் பீல் பிராந்திய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்த இளைஞன் உடனடியாக உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சம்பவம் தொடர்பில் வேறு தகவல்களை வெளியிடாத பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon