Menu

மீண்டும் நிதியமைச்சரான அருண்ஜெட்லி

மத்திய அமைச்சர், அருண் ஜெட்லிக்கு மீண்டும் நிதித்துறை பொறுப்பை வழங்குவதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

 

மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார.

 

இந்த நிலையில் அருண் ஜெட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சில மாதங்கள் ஓய்வில் இருந்திருந்தார்.

 

இந்தக் காலப்பகுதியில், மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் நிதியமமைச்சர் பொறுப்பு கையளிக்கப்பட்டிருந்தது.

 

தற்போது சிகிச்சை முடிந்து அருண் ஜெட்லி உடல்நலம் தேறியதை அடுத்து, நிதித்துறை மற்றும் நிறுவனங்கள், விவகாரத்துறை மீண்டும் அருண் ஜெட்லியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon