Menu

யாழில் குள்ள மனிதர்கள் தொடர்பாக முறைபாடுகள் இல்லையாம்.!!!!!

யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களை அச்சுறுத்தி வருவதாகக் கூறப்படும் குள்ள மனிதர்கள் தொடர்பாக இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை என, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றத்தில் நிலையியல் கட்டளையின் கீழ் டக்ளஸ் தேவானந்தாவினால் எழுப்பபட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் கிறீஸ் பூதங்களால் அச்சுறுத்தப்பட்டு வந்த மக்கள் தற்போது குள்ள மனிதர்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிட்ட டக்ளஸ் தேவானந்தா இதன் பின்னணி என்ன என்றும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையங்களில் இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை என்றும் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்தள்ளார்.

வடக்கில் இடம்பெறும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகளின் போது ஆவாக் குழுவுடன் தொடர்புடையதாக கருதப்படுகின்ற 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தள்ளார்.

அத்துடன் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புடையவர்களா? என்பது தொடர்பிலும் மற்றும் இந்த வன்முறைகளின் பின்னணியில் அரசியல்வாதிகளின் தொடர்பு இருக்கிறதா? என்பது தொடர்பிலும் இதுவரையில் தகவல் எவையும் கிடைகப்பெறவில்லை என்றும் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்தள்ளார்.

Leave a Reply

Right Menu Icon