Menu

இரா.சம்பந்தனுக்கு அழைப்பு விடுத்துள்ள பொது ஜன பெரமுன கட்சி!!!

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இரா.சம்பந்தனுக்கு ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்கு ஆதரவாக ஒன்றிணைந்த எதிரணி நடத்தும் போராட்டத்தில் கலந்துக் கொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவரான இரா.சம்பந்தனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு கொழும்பில் இன்று நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்துள்ள கட்சியின் பிரதிநிதியான அருண் தம்பிமுத்து இவ்வாறு அழைப்பு விடுத்தள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரான இரா.சம்பந்தன்; வடக்கு மற்றும் கிழக்கிற்கான தலைவர் அல்ல என தெரிவித்துள்ள அருண் தம்பிமுத்து முழு நாட்டு மக்களது பொருளாதாரத்தையும், இறையாண்மையையும் பாதுகாக்க வேண்டிய கடமையும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon