Menu

சிறுபான்மையினரின் ஆலோசனைகள் நிராகரிக்கப்பட்டு எல்லைநிர்ணய அறிக்கை தயாரிப்பு – கூட்டமைப்பு சுட்டிக்காட்டு

எல்லை நிர்ணய அறிக்கையை தாம் ஏற்றுக்கொண்டால் சிறுபான்மை தேசிய இனங்களின் பிரதிநிதித்துவங்கள் பறிபோகும் நிலை ஏற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம்; இடம்பெற்ற எல்லை நிர்ணய அறிக்கை குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

 

பலரது எதிர்ப்பை மீறி எல்லை நிர்ணய அறிக்கையை நிறைவேற்றுவது தொடர்பான அரசாங்கத்தின் முயற்சி பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

 

எல்லை நிர்ணய அறிக்கையை தயாரிப்பதற்கு அனைத்து தரப்பிடமிருந்து ஆலோசனை கோரப்பட்ட போதிலும், சிறுபான்மை தரப்புகளால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் நிராகரிக்கப்பட்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக மாவைசேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

 

எல்லை நிர்ணய அறிக்கையை தாம் ஏற்றுக்கொண்டால் சிறுபான்மை தேசிய இனங்களின் பிரதிநிதித்துவங்கள் பறிபோகும் நிலை ஏற்படும் என்பதனால். இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon