Menu

பிராம்டனில் வாகன விபத்து ஜந்து பேர் காயம்.!!!!

பிராம்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்க்படுகின்றது.

இதில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருந்ததுடன் வாகன சாரதிகள் வெளியேற முடியாமல் சுமார் 6 மணி நேரம் போராடியதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

விபத்து சம்பவத்தின் போது வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் வாகன சாரதிகள் உடனடியாக வாகனத்தை விட்டு வெளியேற முடியாமல் சிக்கி கொண்டிருந்ததாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இந்த விபத்தில் மேலதிகமாக 3 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டிருந்தாக தெரிவித்த பொலிசார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தள்ளனர்.

இதன்போது குறித்த வீதியூடான போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டிருந்ததுடன் பின்னர் வீதி திறந்து விடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon