Menu

பழமை வாதக் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ள மக்சிம் பேர்னியர்..!!!!

கனடாவின் பழமை வாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மக்சிம் பேர்னியர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அத்துடன் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும் மக்சிம் பேர்னியர் அறிவித்துள்ளார்.

பழமைவாதக் கட்சியில் இருந்து வெளியேறுவது தொடர்பாக ஏனைய சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தான் விவாதிக்கவில்லை என்றும் மக்சிம் பேர்னியர் மேலும் தெரிவித்துள்ளார்.

தனது அரசியல் தொடர்பான கொள்கைகளை வேறு விதமாக முன்னெடுத்து செல்லவுள்ளதாகவும் மக்சிம் பேர்னியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனேடிய மக்களுக்கு குரல் கொடுப்பதற்காக மாற்று வழியினைத் தேர்ந்தெடுக்கவுள்ளதாக தெரிவித்த மக்சிம் பேர்னியர்
சுதந்திரம் பொறுப்புக்கூறல், நீதி, மற்றும் மரியாதை என்பனவற்றுக்காக தொடர்ந்து போராடவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மட்டத்திலான, ஊழலற்ற, சுயாதீனமான கட்சி ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாகவும் மக்சிம் பேர்னியர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஒக்டோபரில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னர் தனது புதிய கட்சி தயாராகிவிடும் என்றும் மக்சிம் பேர்னியர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், அண்மைக் காலமாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ மீதும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த மக்சிம் பேர்னியர்

கனேடிய பிரதமரின் குடிவரவுக் கொள்கைகளை கடுமையாக சாடியதுடன், பல்கலாச்சார நிலைப்பாடானது அளவுக்க அதிகமாக செல்வதாகவும் கண்டனம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon