Menu

பிரம்ப்டன் பகுதியில் கோர விபத்து 6 பேர் காயம்.!!!

பிரம்ப்டன் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவமானது அவென்யூ பகுதியில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த 6 பேரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவர்களது உயிருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பீல் பிராந்திய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon