Menu

தமிழ் மக்களின் கொள்கை அடிப்படையில் சுரெஸ், மற்றும் கஜேந்திரகுமார் ஓகே என்கிறார்…!!!!

தமிழ் மக்களின் கொள்கை, அரசியல் தீர்வு, மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் உள்ளிட்ட விடையங்களை ஆராய்ந்து வருவதாக வடக்கு மகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் கொள்கை அடிப்படையில் தானும், சுரெஸ் பிரேமச்சந்திரனும், மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட சில தரப்புக்களிடையே ஒற்றுமைகள் காணப்படுவதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண மக்கள் தன்மீது நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ள விக்னேஸ்வரன் எனவே வடக்கு மகாகாண மக்களுடனே தொடர்ந்தும் இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

எனவே தமிழ் மக்களின்; அபிலாஷைகளுக்கு காத்திரமான பணியை ஆற்றவேண்டிய கடமை உள்ளது என்பதை உணர்ந்து கொண்டுள்ளதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரசியலில் தனியாக பயனிப்பது தொடர்பாக தீர்மானிக்கவில்லை என தெரிவித்துள்ள விக்னேஸ்வரன் ஆனால் தமிழ் மக்களின் கொள்கை, அரசியல் தீர்வு, அபிவிருத்தி செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் அண்மைக்காலமாக சீர்தூக்கிப் பார்த்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தள்ளார்.

தமிழ் மக்கள் வழங்கிய அடிப்படைக் கொள்கையின் பிரகாரம் பார்க்கின்ற போது தனக்கும், சுரேஸ் பிரேமசந்திரளுக்கும், மற்றும் கஜேந்திரகுமாருக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருப்பதாக உணரவில்லை என்றும் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற...

Leave a Reply

Right Menu Icon