Menu

விக்கியின் கோரிக்கை நிராகரிப்பு ..இரா.சம்பந்தன்.!!!

அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் பங்கேற்பதால், அரசியல் தீர்வுக்கான முயற்சிகளுக்கு எந்த தடைகளும் ஏற்படாது என எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பங்கேற்பதனால் அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளுக்கு எந்தவிதமான குந்தகத்தினையும் ஏற்படுத்தாது என்றும் இரா.சம்பந்தன் உறுதியளித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்கேற்க கூடாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கடிதம் மூலம் இரா.சம்பந்தனிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு, அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் பங்கேற்கபோவதாக ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

இவ்வாறான நிலையில் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியில், இராணுவத்தினரும் இணைந்து செயற்படுவதானது அரசியல் தீர்வு உட்பட பல விடயங்களில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலணியில் குறைகள் காணப்பட்டாலும் அதில் பங்கேற்பதன் மூலம் குறைகளை சுட்டிக்காட்டி அதற்கான தீர்வுகளைக் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி செயலணியில் பங்கேற்பதன் மூலம் அரசியல் தீர்வுக்கு உதவக்கூடிய வகையில், இந்த கூட்டத்தினை சாதகமாக மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என்றும் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon