Menu

எதிர்வரும் 7ம் திகதி விக்கி மற்றும் சம்பந்தன் சந்திப்பு.!!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தி தொடர்பாக நாளையதினம் நடைபெறவுள்ள ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கான, அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளவுள்ள நிலையில் தான் பங்கேற்க போவதில்லை என்றும் விக்கினேஸ்வரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது கூட்டம் நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பில் இன்றையதினம் ஊடகமென்று எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே விக்கினேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கும் தனக்கும் இடையிலான சந்திப்பு அடுத்த மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் விக்கினேஸ்வரன் மேலும் தெரிவித்தள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon