Menu

ஸ்காபுரோவில் இன்று துப்பாக்கி சூடு ஒருவர் படுகாயம்.!!

ஸ்காபுரோவில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கிழக்கு அவனியூ மற்றும் பெர்மிலி வீதிக்கு அருகில் இன்று அதிகாலை 4 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் உடனடியாக படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட நபரினை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

படுகாயமடைந்துள்ள நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்டதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தள்ளனர்.

அத்துடன் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான தகவல் அறிந்தோர் பொலிசாரை தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon