Menu

கேரள வெள்ளப்பெருக்கிற்கு நிதி வழங்க, புதுச்சேரி அரச ஊழியர்கள் மறுப்பு

கேரள மாநிலத்தில் பெய்த கன மழை காரணமாக பாரிய உயிரிழப்புக்களும் சொத்துச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

 

இந்த நிலையில் வெள்ளப் பாதிப்பிற்குள்ளான கேரள மாநிலத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரணப் பொருட்களும் நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

குறிப்பாக, தமிழகம் அதிகளவு நிவாரணம் மற்றும் உதவிகளை வழங்கி வருகிறது.

 

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலமும் கேரளாவிற்கு அதிகளவு நிதி வழங்குவதற்கான நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது.

 

இதற்காக புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாரயணசாமி, பல்வேறு வழிகளில் நிதிசேகரிப்பில் ஈடுபட்டார்.

 

அந்த வகையில், அரச ஊழியர்கள் அனைவரும், தமது ஒருநாள் ஊதியத்தினை கேரள நிதிக்காக வழங்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கேட்டிருந்தார்.

 

ஊதியத்தை வழங்குவதற்கான ஒப்புதல் கடிதத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் அரசு ஊழியர்கள் சங்கங்களின் தலைவர்கள் வழங்கியிருந்தனர்.

 

இந்த நிலையில், முல்லைப் பெரியாறில் இருந்து தமிழக அரசு நீரைத் திறந்து விட்டமையினாலேயே அதிகளவு வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டதாகவும், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தைக்குறைக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கேரள அரசு உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

 

இதையடுத்து உச்சநீதிமன்றமும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்க உயரத்தை குறைக்கும்படி உத்தரவிட்டது.

 

கேரள அரசின் இந்தச் செயல் தமிழர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதனால் கேரளத்துக்கு தொடர்ந்து உதவ வேண்டுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளமையால், புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களில் ஒரு பிரிவினர் தமது, ஒரு நாள் ஊதியத்தைப் கேரளாவிற்கு வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

 

அரசு ஊழியர்களில் ஒரு பிரிவினர் கேரளத்துக்கு தமது ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

அத்துடன் தமது ஊதியத்தை வழங்குவது தொடர்பில், புதுச்சேரி முதலமைச்சருக்கு ஒப்புதல் கடிதம் வழங்குவதையும் மறுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் கேரள மக்களுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி திட்டமிட்டபடி அதிகளவு நிதி திரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon