Menu

தமிழர்களின் வேணவாவை தீர்க்க பொது வாக்கெடுப்பு..!!!

நாட்டில் ஓர் நிலையான அரசியல் தீர்வைக் காண்பதை நோக்காகக் கொண்டு, தமிழ் மக்களின் வேணவாவைத் தீர்மானிப்பதற்கு, இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஐ.நா. சபையின் கண்காணிப்புடன் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என வடக்கு மாகாண சபையினால் தீர்மான வரைபு முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐ.நா. சபை­யின் உறுப்பு நாடு­களும் இதற்கு உதவவேண்­டும் என்றும் வடக்கு மாகாண சபையானது ஐ.நா. சபை­யைக் கோரும் தீர்­மான வரைவு முன்­வைக்­கப்­பட்டுள்­ளது.

வடக்கு மாகாண சபை­யின் 130ஆவது அமர்வு எதிர்­வ­ரும் 30ஆம் திகதி வியா­ழக் கிழமை, கைத­டி­யி­லுள்ள பேர­வைச் செய­ல­கத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது.

சபை­யின் அன்­றைய அமர்­வில் எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்ள நிகழ்சி நிர­லி­லேயே மேற்­படி தீர்­மான வரைவு உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.

வடக்கு மாகாண சபை­யின் ஆளும் கட்சி உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்­தால் இந்­தத் தீர்­மான வரைவு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த கால ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் தீர்­மா­னங்­கள் மற்­றும் ஐ.நா. சபை­யின் செய­லர் நாய­கத்­தின் பொறுப்­புக் கூறு­த­லுக்­கான அறிக்கை, ஐ.நா.வின் உள்­ளக மீளாய்­வுக் குழு­வின் அறிக்கை ஆகி­ய­வற்றை கவ­னத்­தில் எடுத்­தும்,இலங்­கை­யில் சிங்­கள மற்­றும் தமிழ் மக்­க­ளுக்கு இடை­யி­லான அர­சி­யல் சிக்­க­லா­னது 1948 ஆம் ஆண்டு பெரிய பிரிட்­ட­னி­ட­மி­ருந்து இந்­தத் தீவா­னது சுதந்­தி­ரத்­தைப் பெற்­றுக்­கொண்­ட­தி­லி­ருந்து சீர­ழி­வுக்கு உட்­பட்­டுள்­ள­மை­யும், போரின் மூல கார­ண­மா­கிய அர­சி­யல் சிக்­கல் நிலை­யா­னது பல்­வேறு முயற்;சிக­ளின் பின்­ன­ரும் இது­வ­ரை­யும் தீர்க்­கப்­ப­டா­தை­யும் கவ­னத்­தில் எடுத்து வடக்கு மாகாண அரசு 5 தீர்­மா­னங்­களை எடுக்­க­வேண்­டும் என்று சிவா­ஜி­லிங்­கம் சமர்­பித்­துள்ள தீர்­மான வரை­வில் கூறப்­பட்­டுள்­ளது.

‘இலங்­கை­யில் தமிழ் மக்­க­ளுக்­குச் சமத்­து­வ­மான அர­சி­யல் தீர்வை வழங்­கு­வ­தற்கு முடி­யா­மை­யி­னா­லும், விரும்­பா­மை­யி­னா­லும், போருக்­கான மூல கார­ணத்தை சமா­ளிக்­கத் தவ­றி­யுள்­ள­மை­யா­லும் அத்­து­டன் கடந்த கால வன்­மு­றை­யின் மீள் எழு­கை­யைத் தவிர்ப்­ப­தன் பொருட்டு எந்­த­வொரு அர்த்­த­முள்ள முயற்­சி­யை­யும் முன்­னெ­டுப்­ப­தற்­குத் தவ­றி­யுள்­ள­மை­யி­னா­லும், ஓர் நிலை­யான அர­சி­யல்த் தீர்வை காண்­பதை நோக்­கா­கக் கொண்டு தமிழ் மக்­க­ளின் அர­சி­யல் வேண­வாக்­க­ளைத் தீர்­மா­னிப்­ப­தன் பொருட்டு இலங்கை தீவி;ன் வடக்கு மற்­றும் கிழக்கு பிர­தே­சத்­தில் ஐக்­கிய நாடு­கள் சபை­யின் கண்­கா­ணிப்­பு­டன் கூடிய பொது வாக்­கெ­டுப்பு நடத்­து­வ­தற்கு உத­வு­மாறு ஐக்­கிய நாடு­கள் சபை­யின் உறுப்பு நாடு­களை இந்­தச் சபை கோரு­கின்­றது’ என்று 5 தீர்­மா­னங்­க­ளுள் ஒன்­றா­கக் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon