Menu

பிரதமராக முடியும் என்று சொல்லும் தைரியம் கூட ராகுல்காந்திக்கு இல்லை – தமிழிசை விமர்சனம்

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து வெளியிட்டுள்ளார்.

 

தொழில்முனைவோராக குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு பெருகி வருவதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.

 

மேலும், இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை நிலவுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசிய விடயம், அடிப்படை ஆதாரமற்றதாகவே அனைவரும் எடுத்துக் கொள்கின்றனர் என தமிழக பா.ஜாஇகா தலைவர் தெரிவித்துள்ளார்.

 

அதுமட்டுமன்றி, கூட்டணி அமைத்து தன்னால் பிரதமராக முடியும் என ராகுல்காந்தியால், துணிச்சலாக சொல்ல முடியவில்லை என தமிழிசை விமர்சித்துள்ளார்.

 

 

மோடியை எந்த விதத்திலும் எதிர்கொள்ள முடியவில்லையே என்ற பரிதவிப்பில் ராகுல்காந்தியும், எதிர்க்கட்சிகளும், இருப்பதன் வெளிப்பாடே ராகுல்காந்தியின் பேச்சு என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் மோடி அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருப்பதனால், கருத்துக்கணிப்பில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் மோடிதான் பிரதமராக வர வேண்டும் என விரும்புவதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

ஏதோ ஒரு வகையில் மோடியின், நலத்திட்டங்கள், மக்களைச் சென்றடைந்து மக்கள் பயன்பெறுகின்றமையே மோடியின் பலம் என தமிழக பா.ஜா.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon