Menu

வலிந்து காணாமல் போனோர் விடையத்தில் உலக நாடுகள் தலையிடவேண்டும்..!!!!

இலங்கையில் வலிந்து காணாமல் போனாருக்கான விடையத்தினை ஐக்கிய நாடுகள் சபையில் எடுத்து கூறுவதற்கு உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயத்தை ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோரது குழுவிற்கு எடுத்துக்கூறுவதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 30ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் அனுஸ்டிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதனை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்க்ப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் கணிப்பீட்டின் படி அதிக எண்ணிக்கையான மக்கள் காணாமல் ஆக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இறுதி யுத்தத்தில் சரணடைந்ததன் பின்னர் காணாமல் போனவர்கள் உள்ளிட்ட பலர் குறித்த விபரங்கள் இன்னும் வெளியாக்கப்படவில்லை என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

எனவே இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகளின் குழு வினைத்திறனாக செயற்பட வேண்டிய அழுத்தங்களை கொடுக்க வேண்டிய பொறுப்பு, சர்வதேச சானத்தை அங்கீகரித்த அனைத்து நாடுகளின் பொறுப்பாகும் என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நாளையதினம் மகிந்த பாராளுமன்றில் விசேட உரை

நாளையதினம் பாராளுமன்றில் பிரதமர் மகிந்த...

Leave a Reply

Right Menu Icon