Menu

எல்லை நிர்ணய அறிக்கையின் தோல்விக்கு தான் பொறுப்பில்லை என்கிறார் அமைச்சர்…!!!!

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டமைக்கு தான் பொறுப்பல்ல என மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பைஸர் முஸ்தபா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய அறிக்கையை தானே சபையில் சமர்ப்பித்திருந்ததுடன் அதற்கெதிராகவும் வாக்களித்தமை தொடர்பில் தற்போது பல்வேறு தரப்பினரும் பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகவும் பைஸர் முஸ்தபா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை தான் தயாரித்ததாகவும் சிலர் நினைத்துக்கொண்டிருப்பதாகவும் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் ஜனநாயகம் குறித்து கருத்து தெரிவிக்கும் போது சில விடயங்களை சிந்திக்க வேண்டும் என்றும் பைஸர் முஸ்தபா மேலும் தெரிவித்தள்ளார்.

ஒரு பிரதேசத்தின் தேர்தல் தொகுதியை வகுப்பதே எல்லை நிர்ணயம் எனப்படுகிறது என்று தெரிவித்துள்ள பைஸர் முஸ்தபா
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறைமையை இல்லாதொழிக்க போவதாக உறுதி மொழி வழங்கியிருந்தாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, இந்தத் திருத்தச்சட்டத்தை மாற்றியமைத்து, புதிய எல்லைகளை வகுத்து வர்த்தமானியை வெளியிட்டதாக தெரிவித்த பைஸர் முஸ்தபா

மாகாணசபைத் தேர்தலிலும் விகிசார முறைமை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இது தொடர்பிலான சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டுமெனில் நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பலம் அவசியம் என சட்ட மா அதிபர் கூறியிருந்ததாகவும் பைஸர் முஸ்தபா மேலும் தெரிவித்தள்ளார்.

இதனால், சிறுபான்மையினக் கட்சிகளுக்கிடையில் கருத்து மோதல்களும் ஏற்பட்டதாகவும் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டதாக தெரிவித்த பைஸர் முஸ்தபா
ஆனால், இந்தக் குழுவின் எந்தவொரு செயற்பாட்டிலும் தான் ஈடுபடவில்லை என்றும் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon