Menu

நல்லாட்சி அரசாங்கத்தின் தேர்தல் நாடகம் அம்பலம்..!!!!

மாகாண சபைகளுக்கான தேர்தலை பிற்போடும் நோக்கத்திலேயே அரசாங்கம் எல்லை நிர்ணய அறிக்கையினை பாராளுமன்றத்தில் தேல்வியடைய செய்திருந்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளர் விஜத ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.

எல்லை நிர்ணய அறிக்கையினை அரசாங்கம் தோல்வியடைய செய்துள்ள நிலையில்
பிரதமர் தலைமையிலான ஐவர் கொண்ட குழுவின் மீளாய்வு அறிக்கையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமாகவே அமையும் என்றும் விஜத ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை தொடர்ந்து அனைவரும் குறிப்பாக சிறுபான்மை கட்சிகள் புதிய தேர்தல் முறைமைக்கு எதிர்ப்பினை தெரிவித்து வருவதாகவும் விஜத ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கமும் இவ்விடயத்திற்கு விரைவான தீர்வினை வழங்காது காலம் தாழ்த்தி வந்ததாக தெரிவித்த விஜத ஹேரத்
இதன் பெறுபேறு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் வெளிவந்ததிருந்தாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந் நிலையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான மாற்று வழிமுறையினை கையாளும் விதமாக அரசாங்கம் பிரதமர் தலைமையிலான குழுவினை நியமிக்க தீர்மானித்துள்ளதாகவும் விஜத ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இக்குழுவின் பரிந்துரைகளும் மாகாண சபைகளுக்கான தேர்தலை எவ்வாறு பிற்போட வேண்டும் என்று அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதாகவே காணப்படுவதாகவும் விஜத ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon