Menu

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்..!!!கனடா சுட்டிக்காட்டு.!!

உலகம் முழுவதும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான ஒட்டாவா பிரசாரத்திற்கு ஆதரவளிக்குமாறு கனடா ஜேர்மனியை வலியுறுத்தியுள்ளது.

பெர்லினில் நடைபெற்ற ஜேர்மன் தூதுவர்களின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலண்ட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் பெணகளின்; உரிமைகள் உள்ளிட்ட மனித உரிமைகளை நிலை நிறுத்துவதற்கு கனடா தொடர்ந்தும் பாடுபட்டு வருவதாகவும் கிறிஸ்டியா ஃப்ரீலண்ட் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே தமது இந்த நிலைப்பாட்டிற்கு ஜேர்மனியின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் கிறிஸ்டியா ஃப்ரீலண்ட் குறிப்பிட்டுள்ளார்.

சிரிய அகதிகளின் நெருக்கடி காரணமாக ஜேர்மனி மாத்திரமின்றி ஐரோப்பா முழுவதும் கடுமையான சவால்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்த கனேடிய வெளிவிவகார அமைச்சர் இதற்கு தமது அனுதாபங்களை பகிர்ந்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள அதேவேளை சவுதி அரேபியாவில் பெண்களின் உரிமைக்காக போராடிய சமர் பேடாவி

கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon