Menu

சர்வதேச 8 ஆவது பாதுகாப்பு செயலமர்வு கொழுப்பில் !!!

சர்வதேச ரீதியிலான 8 ஆவது பாதுகாப்பு செயலமர்வு எதிர்வரும் 30ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியா உள்ளடங்கலாக 45 நாடுகளின் பங்குபற்றுதலுடன் இவ் வாண்டுக்கான சர்வதேச ரீதியிலான 8 ஆவது பாதுகாப்பு செயலமர்வு நாளை மறுதினம் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளதாகவும் சுமித் அதபத்து மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள பாதுகாப்பு செயலமர்வானது இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, கனடா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்க நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் உள்ளிட்ட 45 நாடுகள் பங்குபற்றவுள்ளதுடன், அந்நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் 100 பேர் வரை கலந்துகொள்ளவுள்ளதாகவும் சுமித் அதபத்து குறிப்பிட்டுள்ளார்.

இச் செயலமர்வு பூகோள ரீதியான இடையூறுகளுக்கு மத்தியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் எனும் அடிப்படையில் இடம்பெறவுள்ளதாகவும் சுமித் அதபத்து தெரிவித்தள்ளார்.

இதன் போது பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், புத்திஜீவிகள் மற்றும் அறிவுசார் வல்லுனர்கள் அவர்களது அனுபவங்களையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளவுள்ளதாகவும் சுமித் அதபத்து மேலும் தெரிவித்தள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon