Menu

ரசிகர்களை ஏமாற்றிய பி.வி..சிந்து..!!! பதக்கத்தை கைப்பற்றினார்.!!!!!

ஆசிய விளையாட்டின் பெண்களுக்கான பாட்மிண்டன் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனையான தாய் ஹ யிங் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

நடைபெற்ற இறுதிச்சுற்றில் சீன தைபேவைச் சேர்ந்த தாய் {ஹ யிங் மற்றும் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து ஆகியோர் மோதினர்.

இதில் சிறப்பாக விளையாடிய சீன நாட்டு வீராங்கனை முதலாவது செட்டை 21-13 என கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்தும் சிறப்பாக கெயற்பட்ட சீன நாட்டு வீராங்கனை 2வது செட்டையும் 21-16 என கைப்பற்றி பி.வி.சிந்துவை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

நடைபெற்ற பெண்களுக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதன் முறையாக இறுதிச்

சுற்றுக்கு தகுதிபெற்று வரலாற்று சாதனையும் படைத்துள்ளார்.

பெண்களுக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தோல்வியடைந்துள்ள பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கத்தினை கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon