Menu

முதன் முறையாக புதுச்சேரியிலிருந்து வெளிநாட்டு விமான சேவை ஆரம்பம்.!!!

இந்திய மாநிலமான புதுச்சேரியிலிருந்து முதன் முறையாக வெளிநாடுகளுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

புதுச்சேரியிலிருந்து முதல் முறையாக வெளிநாடுகளுக்கான விமான சேவைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து பெங்களூர் மற்றும் ஐதாராபாத் ஆகிய இரண்டு நகரங்களுக்கான சேவைகளையே தற்போது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி தொடக்கம் புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நாட்டின் பேங்காங் நகருக்கான முதலாவது வெளிநாட்டு விமான சேவையை ஆரம்பிக்க உள்ளதாகவும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

எனவே இந்த சேவைக்கான முன்பதிவுகளை நிறுவனம் தற்போது ஆரம்பித்தள்ளது.

தினமும் காலை 11.45 மணிக்கு புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானம் ஹைதராபாத் வழியாக இரவு 9.40 மணிக்கு பேங்காங் நகருக்கு சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரவு 10.40 மணிக்கு பேங்காங் நகரிலிருந்து புறப்படும் விமானம் ஹைதராபாத் வழியாக மறுநாள் காலை 11.25 மணிக்கு புதுச்சேரி வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கஜா நிவாரண பொருட்களில் ரஜினி புகைப்பட ஸ்டிக்கர் !!

கஜா புயலின் கோர தாண்டவத்தில் நாகை, கடலூர்...

Leave a Reply

Right Menu Icon