Menu

ரொறொன்ரோ குடியிருப்பில் நுழைந்த மக்கள் கவலை.!!!

ரொறொன்ரோவில் நாடாளுமன்ற வீதியில் உள்ள குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தை தொடர்ந்து மீண்டும் குறித்த வீடுகளில் வசிப்பதற்கு மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

குறித்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் கடிதத்தின் உட்கட்டமைப்புக்கள் சேதமடைந்துள்ள நிலையிலேயே மக்கள் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இந்த குடியிருப்பின் 20வது மாடி கட்டிடத்தில் பாரிய தீ ஏற்பட்டிருந்ததுடன் அங்கு வசித்த சுமார் ஆயிரத்து 500 பேர் வெளியேற்றப்பட்டிருந்தனர்.

இதன் பின்னர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் குறித்த தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், அக்கட்டிடத்தில் பல சேதங்கள் காணப்படுவதாகவும் அதை சரிசெய்ய சில மாதங்கள் எடுக்கும் எனவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், குடியிருப்பில் வசித்து வந்த மக்கள் அவர்களின் வீடுகளை பார்வையிட்டு வருகின்றனர்.
அத்துடன் வீடுகள் பெரும் சேதமடைந்துள்ள நிலையில் மக்கள் கவலை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆளும் கட்சியின் தெரிவுக் குழுவுக்கு எழுவர் நியமனம்

ஆளும் கட்சியின் தெரிவுக் குழுவுக்கு ஏழு...

Leave a Reply

Right Menu Icon