Menu

அமெரிக்க பகிரங்க டென்னிஸில் நடால் முன்னேற்றம்

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரர் ரபேல் நடால் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

 

வருடத்தின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர் நேற்று நியூயோர்க்கில் ஆரம்பமானது.

 

செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள இந்த தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் நேற்று ஆரம்பமாகின.

 

இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரவு முதல் சுற்றுப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெய்னின் ரஃபேல் நடால், சகநாட்டு வீரர் டேவிட் ஃபெராருடன் மோதினார்.

 

இந்த போட்டியில் நாடால் ஆதிக்கம் செலுத்தி முதல் செட்டில் 3-1 என முன்னிலைப் பெற்றிருந்தபோது, டேவிட் ஃபெரார் உபாதைக்கு உள்ளானார்.

 

உபாதைக்கு உள்ளான டேவிட் ஃபெராரினால் தொடர்ந்தும் விளையாட முடியாத நிலையில், அவர் போட்டியிலிருந்து விலக, நடால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

நாளையதினம் மகிந்த பாராளுமன்றில் விசேட உரை

நாளையதினம் பாராளுமன்றில் பிரதமர் மகிந்த...

Leave a Reply

Right Menu Icon