Menu

கனடாவிற்கு நன்மையாக அமைந்தால் உடன்படிக்கையில் கைச்சாத்திட தயார்..!!!

கனடாவுக்கு நன்மை பயக்கும் வகையில் வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அமையுமானால், உடன்படிக்கையில் கைச்சாத்திட தயார் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார்.

கியூபெக்குக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜஸ்ரின் ரூடோ அங்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் வொஷிங்டனில், கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சீரமைக்கப்பட்ட முக்கோண வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தநிலையில், இந்த ஒப்பந்தம் இன்னும் ஒரு வார காலப்பகுதியில் நிறைவு செய்யப்படும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகள் கடந்த திங்கட்கிழமை வட அமெரிக்க வர்த்தக உடன்படிக்கைக்கு இணங்கியுள்ள நிலையில் தற்போது கனடாவிற்கு நெருக்கடி நிலை தோன்றியுள்ளதாகவும் கனேடிய பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் கனடாவுக்கு நீண்ட கால நன்மை, மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அனுகூலத்தையும் ஏற்படுத்த கூடிய வகையில் ஒப்பந்தம் அமையுமானால் உடன்படிக்கையில் கைச்சாத்திட தயாராக உள்ளதாகவும் கனேடிய பிரதமர் மேலும் தெரிவித்தள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon