Menu

பிரம்டன் பகுதியில் விபத்து 3 பேர் காயம்..!!!

பிரம்டன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரம்டன் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது வாகனம் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவமானது இன்று அதிகாலை வில்லியம்ஸ் பார்க்வே மற்றும் கிரெஸ் ட்விவ் வீதிக்கு அருகே இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேக கட்டுப்பாட்டினை இழந்த வாகனமானது முதலில் மரம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளான அதேவேளை வீட்டின் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வாகனத்தில் பயணித்த 2 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவித்த பொலிசார்

3ஆவது நபரான வாகனத்தின் சாரதி சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தின் காரணமாக வீடு பலத்த சேதமடைந்துள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon