Menu

கனடியப் பொலிசாரின் அதிரடி 2 வருடத்தின் பின்னர் சந்தேகநபர் கைது

லோரன்ஸ் ஹையொஸ் பகுதியில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பத்துடன். தொடர்புடைய மற்றுமொரு நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அலென் வீதி மற்றம் லோரன்ஸ் அவன்யூ பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி பிற்பகல் வேளையில், காரில் இருந்த 21 வயதுடைய இளைஞன் மீது மற்றுமொரு காரில் சென்றவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

 

எனினும் இதன் போது இரு தரப்பும் மாறி மாறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இதில் காயமடைந்த நபர், சிகிச்சை பெற்று உடல்தேறியிருந்தார்.

 

இந்த சம்பவம் நடைபெற்று 3 நாட்களின் பின்னர், துப்பாகிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று அப்துல்லாஹ் அப்டிகரீம் என்ற 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டிருந்தார்.

 

அதன் பின்னர் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை தேடி வருவதாக பொலிசார் அறிவித்திருந்தனர்.

 

இந்த நிலையில் குறித்த சந்தேக நபரை நேற்றைய தினம் கைது செய்துள்ளதாக ரொரண்டோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon