Menu

காஷ்மீர் பிரச்சினையில் கரிசனை கொள்ளும் பாகிஸ்தான்

காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்கான திட்ட அறிக்கையொன்றினை தயார் செய்து இருப்பதாக பாகிஸ்தானின் மனித உரிமைகள் துறை அமைச்சர், ஷிரீன் மஷாரி தெரிவித்துள்ளார்.

 

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றுக் கொண்டதனைத் தொடர்ந்து , இந்தியாவுடனான அனைத்துப் பிரச்சினைகளையும், குறிப்பாக காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்ப்பதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

இதற்கு வலுசேர்க்கும் வகையில் பாகிஸ்தானின் மனித உரிமைகள் துறை பெண் அமைச்சர் ஷிரீன் மஷாரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளார்.

 

காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்கான திட்ட அறிக்கையொன்று தயார் செய்திருப்பதாகவும், அந்த அறிக்கை பிரதமர் இம்ரான்கான் மற்றும் அமைச்சர்களுக்கு அனுப்பப்படும் என அமைச்சர் ஷிரீன் மஷாரி தெரிவித்துள்ளார்.

 

இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் அதை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டப்படும் என அமைச்சர் ஷிரீன் மஷாரி குறிப்பிட்டுள்ளார்.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon