Menu

யாழ்பாணத்தில் மூவருக்கு தலா 5 ரூபா அபராதம் கொடுத்த நீதிமன்றம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், மது போதையில் பொது இடத்தில் வைத்து குழப்பம் விளைவித்த மூவருக்கு தலா 5 ரூபா மாத்திரம் தண்டப்பணம் விதித்து யாழ். நீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பளித்துள்ளது.

மதுபோதையில் பொது இடத்தில் குழப்பம் விளைவித்தவர்களுக்கு மதுவரிச் சட்டத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால் 2 ஆயிரம் ரூபா வரை தண்டம் அறவிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும், யாழ்ப்பாண பொலிஸாரால் 1866ஆம் ஆண்டு பொலிஸ் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதால், குற்றவாளிகள் மூவரிடமும் தலா 5 ரூபா மாத்திரம் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாளையதினம் மகிந்த பாராளுமன்றில் விசேட உரை

நாளையதினம் பாராளுமன்றில் பிரதமர் மகிந்த...

Leave a Reply

Right Menu Icon