Menu

அரசியல் நோக்கம் இல்லையாம் நல்லாட்சி எதிராகவே போராட்டம்..!!!!

எதிர்வரும் 5ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டமானது நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனநாயக விரோத கொள்கைகளுக்கு எதிரானதே தவிர அரசியல் நோக்கத்திற்கானது அல்ல என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் மிஹின்லங்கா ஆகிய நிறுவனங்களில் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பாக, வாக்கு மூலம் வழங்குவதற்காக இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையாகியருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனநாயக விரோத, மற்றும் அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்ளும் அரசாங்கமே இன்று நாட்டில் உள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒரு குடும்பத்தை இலக்குவைத்தே அரசாங்கத்தின் குரோத செயற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ஷவினர் அனைவரையும் சிறைக்குள் தள்ளி சிறைச்சாலை ஆடைகளை அணிவிக்க பொவதாக அமைச்சர்களே கூறிக்கெண்டிருப்பதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து அபிவிருத்திகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

வாழ்வாதார சுமையால், மக்கள் தினம் தினம் சிக்கல்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்துக் கொண்டிருப்பதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார்.

எனவே இதற்கெதிராகவே எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon