Menu

பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவனின் குடும்பத்தினருக்கு வீடு கையளிப்பு

யாழ். பொலிசாரினால் கடந்த 2016 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவனின் குடும்பத்தினருக்கான வீடு இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டதற்கு அமைய மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இந்து மத விவகாரம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் சுவாமிநாதனால் இன்று குறித்த வீடு கையளிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த நிலையில், குறித்த இருவரது குடும்பத்தாருக்கும் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என அமைச்சு உறுதியளித்திருந்தது.

 

அதற்கமைய முதற்கட்டமாக கிளிநொச்சியில் வசிக்கும் நடராஜா கஜனின் தாயாருக்கு இன்று வீடு கையளிக்கப்பட்டுள்ளது.

 

அமைச்சின் 13 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இராணுவத்தின் உதவியுடன் இவ்வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon