Menu

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக வடக்கு மாகாணசபையில் பிரேரணை.!!!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினர்கள்  தொடர்ச்சியாக போராடி வருகின்ற நிலையில், அவர்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி வடக்கு மாகாண சபையில் இன்று பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 130 ஆவது அமர்வு அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று நடைபெற்றது.

இன்றையதினம் வலிந்து காணமால் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேசதினம் உலகளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன உறவுகளைமீட்பதற்காக போராடிக்கொண்டிருக்கும் தமிழ் மக்கள் தொடர்பாக அரசாங்கம் கூடுதல் கவனம் எடுக்கவேண்டும் என்றும் சி.வி.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன்  இதற்கான தீர்வைபெற்றுக் கொடுக்க அரசாங்கம் விநது  நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற தீர்மானத்தினை வடக்கு மாகாண சபை சார்பாக முன்வைதிருப்பதாகவும் சி.வி.கே.சிவஞானம் மேலும் தெரிவித்துள்ளார்.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon