Menu

நித்தியகலா படுகொலையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்!!

திருமுறிகண்டியை சேர்ந்த கறுப்பையா நித்தியகலா என்ற பெண் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், கொலையாளிகளை கைது செய்யுமாறு வலிறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

32 வயதுடைய குறித்த பெண் கடந்த 29ம் திகதி பகல் கிளிநொச்சி பன்னங்கண்டிப்பகுதியில் கழுத்து நெரித்து கொலை செய்பப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த பெண்ணின் கொலைக்கு நீதிகோரி திருமுறிகண்டிப் பகுதியில் பொது அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்தற்கு முன்பாக குறித்த பேரணி ஆரம்பமாகி, வசந்த நகர் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தை சென்றடைந்து அங்கு ஜனாதிபதி, காவற்துறை மா அதிபர், வடமாகாண முதலமைச்சர் ஆகியோருக்கான மனுக்களும் கைளிக்கப்பட்டன.

Leave a Reply

Right Menu Icon