Menu

கனடாவின் வடக்கு பிரம்டன் பகுதியில் விபத்து.!!!

வடக்கு பிரம்டன் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு பிரன்டென் பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதம் ஒன்றைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு பொலிசார் சென்றுள்ளனர்

அப்போது குறித்த பகுதியில் நின்றிருந்த இரண்டு மூன்று சந்தேக நபர்கள் திடீரென துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் இருந்து வாகனம் ஒன்றில் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சந்தேக நபர்கள், ஆயுதங்களுடன் நின்றிருந்ததாகவும் சற்று தூரம் சென்று சில வீடுகளின் கதவினைத் தட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார், தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon